ஆந்திராவில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்- 20 ரெயில்கள் ரத்து
ரெயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை ரெயில்வே செய்துள்ளது;
ஐதராபாத்,
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ரெயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை ரெயில்வே செய்துள்ளது. சிறப்பு ரெயில்கள் மூலம் சென்னை, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.