பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி ரூ. 67.65 லட்சம் மோசடி
பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் மோசடியாளர்கள் ரூ. 67.65 லட்சத்தை ஏமாற்றினர்.;

கோப்புப்படம்
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 53 வயது நபருக்கு கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. இதில் 3 பேர் சேர்ந்த குழு ஒன்று பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறினார். இதனை கேட்ட பாதிக்கப்பட்ட நபர் தனக்கு அதிக லாபம் கிடைக்கப்போகிறது என நம்பி அவர்கள் அனுப்பிய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றி உள்ளார்.
பாதிக்கப்பட்ட 53 வயது நபர் ஜனவரி மாதம் 2025 வரை பல ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 67.65 லட்சத்தை மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நபர் தனது லாபத்தையோ, அசல் முதலீட்டையோ திரும்பக் கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர்கள் எந்த பதிலும் அளிக்க வில்லை தொடர்பை முழுமையாக நிறுத்திவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி நபர்களின் மொபைல் எண்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் விவரங்கள் மூலம் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.