குஜராத்: காகித தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

குஜராத் மாநிலத்தில் காகித தொழிற்சாலை ஒன்றில் திடீரென பயங்கர தீ ஏற்பட்டது.;

Update:2025-03-24 08:01 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் வர்சோலா பகுதியில் காகித தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த காகித தொழிற்சாலையில் டன் கணக்கில் காகித பண்டல்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் காகித தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் காகித பண்டல்கள், உற்பத்தி உபகரணங்கள் மளமளவென எரியத் தொடங்கின.இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த பயங்கர தீ விபத்தில் காகித பண்டல்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்தன. இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்