பீகார்: குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் பலி
பீகாரில் குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் பலியாகினர்.
பாட்னா,
பீகார் மாநிலம் பேங்கா மாவட்டம் ஆனந்த்பூர் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் நேற்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர்.
குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமிகள் 4 பேரும் குளத்தில் மூழ்கினர். இச்சம்பவத்தில் 4 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஊர் மக்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.