சிலியின் முன்னாள் அதிபர் பேச்லெட்க்கு 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான சர்வதேச நடுவர் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

Update: 2024-12-06 23:27 GMT

புதுடெல்லி ,

சிலியின் முன்னாள் அதிபரும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய வழக்கறிஞருமான மிச்செல் பச்லெட்டுக்கு, அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2024 இந்திரா காந்தி அமைதி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை நேற்று(06.12.2024) அறிவித்துள்ளது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான சர்வதேச நடுவர் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார். ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

வெரோனிகா மைக்கேல் பேச்லெட் ஜெரியா என்ற முழுப்பெயர் கொண்ட பேச்லெட், அமைதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் ஐ.நா பெண்களின் நிறுவன இயக்குநராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், மற்றும் சிலியின் முதல் பெண் அதிபராக இரண்டு முறை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்