டானா புயல்: கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிப்பு

வங்கக் கடலில் டானா புயல் உருவாகியுள்ளது.

Update: 2024-10-23 14:52 GMT

சென்னை,

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது . இந்த புயலுக்கு 'டானா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

டானா புயல் வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே நாளை இரவோ அல்லது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலையோ கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை (24-ம் தேதி) மாலை 6 மணி முதல் மறுநாள் (25-ம் தேதி) இரவு 9 மணி வரை 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்