மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம்

மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.;

Update:2025-03-22 08:10 IST
மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம்

பெங்களூரு,

பெலகாவியில் கடந்த மாதம் மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசுப் பேருந்து நடத்துநர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சனையாக மாறியது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் இன்று (மார்ச் 22) முழு அடைப்பு நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்