எதிரிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருங்கள்; ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை

2047-ம் ஆண்டிற்குள் நாடு ஒரு முன்னேற்றம் அடைந்த மற்றும் சுயசார்புடைய நாடாக உருவாக வேண்டிய தேவை உள்ளது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.;

Update: 2024-12-29 21:11 GMT

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள மோ கன்டோன்மென்டுக்கு சென்று, இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பேசினார். அப்போது அவர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் மற்றும் தீவிர கண்காணிப்புடன் இருக்கும்படியும் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு விசயத்தில், இந்தியா அதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு நாடாக இல்லை என்றும் கூறினார். ஏனெனில் நம்முடைய வடக்கு மற்றும் மேற்கு எல்லைகள் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகின்றன. உள்நாட்டிலும் நாம் சவால்களை சந்திக்கிறோம்.

இந்த பின்புலத்தில், நாம் அமைதியாக, கவலையின்றி இருக்க முடியாது. நம்முடைய எதிரிகள், அவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தொடர்ந்து எப்போதும் செயல்பாட்டு நிலையிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில், அவர்களின் செயல்பாடுகள் மீது நாம் தீவிர கண்காணிப்புடன் இருந்து, அவர்களுக்கு எதிராக முறையான மற்றும் சரியான தருணத்தில் திறமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

2047-ம் ஆண்டிற்குள் நாடு ஒரு முன்னேற்றம் அடைந்த மற்றும் சுயசார்புடைய நாடாக உருவாக வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார். அதில், ராணுவத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்