அக்னிபான் ராக்கெட் தேசத்தை பெருமைப்படுத்தும் சாதனை - பிரதமர் மோடி
அக்னிபான் என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சென்னை
சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் செமி கிரையோஜெனிக் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் ஏவும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்த நிலையில், அக்னிபான் ராக்கெட் தேசத்தை பெருமைப்படுத்தும் சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"அக்னிபான் ஏவப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தும் சாதனை. உலகின் முதல் செமி கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் இயங்கும் அக்னிபான் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது நமது நாட்டின் இளைஞர் சக்தியின் குறிப்பிடத்தக்க புத்திசாலித்தனத்திற்கு சான்று. ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்கும், எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்." என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.