உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 4 பேர் விபத்தி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update:2025-03-15 15:54 IST
உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பரராம்பூர் கிராமத்திற்கு அருகே 4 பேர் இரண்டு பைக்குகளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் எதிரில் வந்த கார் ஒன்று இரண்டு பைக்குகளிலும் மோதியதி. இந்த விபத்தில் பைக்கானது சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பைக் தீ பிடித்தது.

இதில் பைக்கில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைக்கண்ட ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திய அந்த காரில் தீ வைத்தனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்தனர். இதனிடையே அங்கு ஏற்பட்ட தீயிணை தீயணைப்புத்துறையினர் விரைந்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த ராம் கேவல்(50), இந்திரஜீத் (32), ராம் சஜிவன் (42) மற்றும் ஜேது (38) என அடையாளம் காணப்பட்டனர். அவர்களது உடலானது பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் அப்பகுதியில் ஹோலி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்