சத்தீஸ்கர்: கார் மீது பைக் மோதி விபத்து - 3 பேர் பலி
சத்தீஸ்கரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.;

ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் பார்பஸ்பூர் கிராமத்தை சேர்ந்த மூன்று நண்பர்கள் பைக்கில் கோத்ரி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பார்பஸ்பூர் கிராமத்தை சேர்ந்த ஆதித்யா தோபி (23), சூரஜ் கன்வர் (22) மற்றும் அகிலேஷ்வர் தோபி (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இறந்து கிடந்த 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஜட்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.