அரபிக்கடலில் 2 படகுகளில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து போதைப்பொருள் கும்பலை மடக்கிப்பிடித்தனர்;

Update:2024-11-29 17:20 IST

புது டெல்லி,

அரபிக்கடலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அந்த பகுதியில் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இரண்டு படகுகளில் போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

இதனிடையே படகுகளை சுற்றி வளைத்த, கடற்படையினர் அவர்களிடம் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். படகில் இருந்த நபர்களை பிடித்து கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் இலங்கை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்