ஈரோடு அருகே 500 கிராம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

ஈரோடு அருகே ஆம்னிபஸ்சில் தங்கம் கடத்தல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;

Update:2025-03-22 21:57 IST
ஈரோடு அருகே 500 கிராம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

ஈரோடு போலீசாருக்கு ஆம்னிபஸ்சில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் லட்சுமி நகர் தேசிய நெடுஞ்சாலையில் ஐதராபாத் - கோயம்புத்தூர் பேருந்தை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அதில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோயம்புத்தூர் சிங்காநல்லூரை சேர்ந்த புகஸ்வாசன் என்பவரின் பையில் தங்கம் பிஸ்கட் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் தங்கம் , வெளிநாட்டு பணம், மொபைல் போன், மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்