21-ம் நூற்றாண்டு இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி

உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.;

Update:2025-01-09 13:29 IST

புவனேஸ்வர்,

புவனேஸ்வரில் நடைபெற்ற ப்ரிஅவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்களைச் சந்திக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பையும் ஆசீர்வாதங்களையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இன்று, உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல, ஜனநாயகம் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்கிறது, அது தனது சொந்தக் கருத்துக்களை மட்டும் வலுவாக முன்வைக்கவில்லை, உலகளாவிய தெற்கின் கருத்தையும் முன்வைக்கிறது. அதன் பாரம்பரியத்தின் வலிமையின் காரணமாக, எதிர்காலம் போரில் இல்லை, புத்தரில் (அமைதியில்) உள்ளது என்பதை உலகிற்குச் சொல்ல இந்தியாவால் முடிகிறது. 21-ம் நூற்றாண்டு இந்தியா நம்பமுடியாத வேகத்திலும் அளவிலும் முன்னேறி வருகிறது. வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு, இந்தியா உலகின் மிகவும் இளம் மற்றும் திறமையான மக்களைக் கொண்ட நாடாக இருக்கும்.

புலம்பெயர் மக்களை அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்திய தூதராகத்தான் எப்போதும் கருதுகிறோம். புலம்பெயர்ந்தோர் எங்கிருந்தாலும் நெருக்கடியான சூழ்நிலைகளின்போது அவர்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம். இது இன்றைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கொள்கைகளில் ஒன்றாகும்.  இன்னும் சில நாட்களில் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா துவங்கும். எங்கும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்