சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.;

Update:2025-03-20 13:19 IST
சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

கோப்புப்படம் 

பிஜாப்பூர்,

இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில், கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில்  22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த சண்டையின்போது மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) ஜவான் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்