என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 334 பணியிடங்கள்
பணி:
நிர்வாகப் பொறியாளர் (மெக்கானிக்கல்)- 35 ,துணைப் பொது மேலாளர் (டிஜிஎம்) (மெக்கானிக்கல்)- 4 ,நிர்வாகப் பொறியாளர் (மெக்கானிக்கல்)- 49,துணைத் தலைமைப் பொறியாளர் (மெக்கானிக்கல்)-52 ,நிர்வாகப் பொறியாளர் (மெக்கானிக்கல்)-5,I கூடுதல் தலைமை மேலாளர் (மெக்கானிக்கல்)- 2,II கூடுதல் தலைமை மேலாளர் (மெக்கானிக்கல்) 1,துணை பொது மேலாளர் (மெக்கானிக்கல்) - 1,நிர்வாக பொறியாளர் (மின்சாரம்)-18,நிர்வாக பொறியாளர் (மின்சாரம்)- 18,துணை தலைமை பொறியாளர் (மின்சாரம்) -27,I நிர்வாக பொறியாளர் (மின்சாரம்)- 2,II நிர்வாக பொறியாளர் (மின்சாரம்)- 3,கூடுதல் தலைமை மேலாளர் (மின்சாரம்) - 4,துணை பொது மேலாளர் (மின்சாரம்) - 2,பொது மேலாளர் (மின்சாரம்) -3,நிர்வாக பொறியாளர் (சிவில்)- 11,துணை பொது மேலாளர் (சிவில்)- 2, நிர்வாக பொறியாளர் (சிவில்)- 9,துணை தலைமை பொறியாளர் (சிவில்) - 11, I நிர்வாக பொறியாளர் (சிவில்)-7,II நிர்வாக பொறியாளர் (சிவில்)- 3, I கூடுதல் தலைமை மேலாளர் (சிவில்) - 2, II கூடுதல் தலைமை மேலாளர் (சிவில்)-1,துணை பொது மேலாளர் (சிவில்) - 1,பொது மேலாளர் (சிவில்)- 1,நிர்வாக பொறியாளர் (கட்டுப்பாடு மற்றும் கருவி)- 7,நிர்வாக பொறியாளர் (கட்டுப்பாடு மற்றும் கருவி) -1,நிர்வாக பொறியாளர் (சுற்றுச்சூழல் பொறியியல்)-3, மேலாளர் (அறிவியல்)- 1,உதவி நிர்வாக மேலாளர் (அறிவியல்) - 2, மேலாளர் (புவியியல்) - 3, துணை முதன்மை மேலாளர் (புவியியல்) - 1, நிர்வாக பொறியாளர் (MME) -6, துணை பொது மேலாளர் (வணிகம்) -2, துணை முதன்மை மேலாளர் (நிதி)- 6, துணை பொது மேலாளர் (நிதி) - 2,பொது மேலாளர் (நிதி) - 4, துணை பொது மேலாளர் (செயலாளர்)- 1, துணை பொது மேலாளர் (சட்டம்)- 1, நிர்வாக பொறியாளர் (சிவில்)-6, மேலாளர்(HR) (சமூக மேம்பாடு)- 4. மருத்துவ அலுவலர்-10.
சம்பள விவரம்: கிரேடு இ-2 பணி ரூ.50,000 - 1,60,000, கிரேடு இ-4 பணி ரூ.70,000 2,00,000, கிரேடு இ-5 பணி ரூ.80,000- 2,20,000, கிரேடு இ-6 பணி ரூ.90,000 2,40,000, கிரேடு இ-7 பணிரூ.1,00,000 - 2,60,000, கிரேடு இ-8 பணிரூ.20,000- 2,80,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 1.11.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.
வயது தளர்வு:
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:(SC/ST)எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.செயலாக்க கட்டணம் ஜி.எஸ்.டி உட்பட ரூ.354 கட்டணம் செலுத்த வேண்டும்.
மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மற்றும் செயலாக்க கட்டணம் ஜி.எஸ்.டி உட்பட ரூ.354 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
கல்வி தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக்கும் முறை: https://www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி-18.11.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி-17.12.2024
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி:17.12.2024(23:45 மணி)