தாம்சன் 65 அங்குல டி.வி
வீட்டு உபயோக சாதனங்களைத் தயாரிக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது தாம்சன் ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.;
65 அங்குல அளவிலானது. டால்பி விஷன் ஸ்டீரியோ, 40 வாட் ஸ்பீக்கருடன் அறிமுகமாகியுள்ளது. மிக மெல்லியதான டிசைன் மெட்டாலிக் ஸ்டாண்ட் இதற்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது.
இதில் 1.5 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் உள்ளது. குரல் வழிக்கட்டுப்பாட்டிலும் செயல்படக்கூடியது. இதன் விலை சுமார் ரூ.43,999.