லாவா பிளேஸ் புரோ

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் லாவா நிறுவனம் பிளேஸ் புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-10-05 08:51 IST

இது 6.78 அங்குல முழு திரையைக் கொண்டது. ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உடையது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.12,499.

Tags:    

மேலும் செய்திகள்