ஒன் பிளஸ் 11 ஆர் சோலார் ரெட் எடிஷன்
ஒன் பிளஸ் நிறுவனம் 11 ஆர் சோலார் ரெட் எடிஷன் என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.;
18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதனால் 50 செயலிகள் வரை எவ்வித இடையூறும் இன்றி விரைவாக செயல்படும். இதன் பின்புறம் மென்மையான பகுதியைக் கொண்டுள்ளது.
பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, ஸ்நாப்டிராகன் 8 பிளஸ் தலைமுறை பிராசஸர் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 100 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வெளிவந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.45,999.