விவோ வி 29, விவோ 29 புரோ ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனம் புதிதாக விவோ வி 29 மற்றும் விவோ 29 புரோ என்ற இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.;
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் விவோ நிறுவனம் புதிதாக விவோ வி 29 மற்றும் விவோ 29 புரோ என்ற இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே 6.78 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. ஸ்நாப்டிராகன் டைமென்சிடி பிராசஸர் உடையது.
இதில் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மிகச் சிறப்பாகப் பதிவாகும். அத்துடன் செல்பி பிரியர்களுக்கென ஆட்டோ போகஸ் முன்புற கேமரா மிகச் சிறந்த புகைப்படங்களை அளிக்கும். இதன் விலை சுமார் ரூ.32,999 முதல் ஆரம்பமாகிறது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம்கார்டு போடும் வசதி, திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4,600 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 80 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. நீலம், சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும். 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் 256 ஜி.பி. நினைவகம் ெகாண்ட மாடலையும் தேர்வு செய்து கொள்ளலாம். விவோ வி 29 புரோ மாடல் நீலம், கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும். 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.39,999. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.42,999.