டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் டெம்ப்ட் நிறுவனம் புதிதாக டெம்ப்ட் ரஷ் என்ற பெயரில் நெக்பேண்டை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-05-11 21:00 IST

இதில் குவால்காம் சி.எஸ்.ஆர் 8635 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 10 மி.மீ. அளவிலான ஸ்பீக்கர் தாமிர வளைய இணைப்புடன் உள்ளது.

இது 20 ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோஹெர்ட் வரையிலான ஒலி அளவை துல்லியமாக உள்வாங்கும். இதன்மூலம் மறு முனையிலிருப்பவர்களுக்கு சரியாக பதிலளிக்க முடியும். உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்போர் மற்றும் இசைப் பிரியர்களுக்கு ஏற்ற வகையிலானது. தூசி, வியர்வை உள்புகாத தன்மை கொண்டது. பன்முக செயல்பாடு களைக் கொண்ட பொத்தான் உள்ளது. நுண்ணிய யு.எஸ்.பி. சார்ஜரைக் கொண்டது. 35 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

இதில் உள்ள பேட்டரி 5 நாட்கள் வரை மின்திறனை சேமித்து வைத்திருக்கும் திறன் கொண்டது. மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை அதிர்வுகள் மூலம் உணர்த்தும். இதன் விலை சுமார் ரூ.649.

Tags:    

மேலும் செய்திகள்