சோனி வயர்லெஸ் ஹெட்போன்

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான சோனி நிறுவனம் புதிதாக டபிள்யூ.ஹெச். –சி.ஹெச் 520. என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-04-28 15:30 GMT

இதில் உள்ள பேட்டரி 50 மணி நேரம் செயல்படும் வகையில் திறன் மிக்கது. 3 நிமிடம் சார்ஜ் செய்தாலே 1 மணி நேரம் செயல்படக்கூடியது. அன்றாட செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் எளிமையான பயன்பாடு களைக் கொண்டுள்ளது. தலையின் அளவுக்கேற்ற வகையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு இயங்குதளம், விண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமின்றி புளூடூத் மூலமும் இதை இணைக்கமுடியும்.

நீலம், பீஜ், வெள்ளை, கருப்பு நிறங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.4,490.

Tags:    

மேலும் செய்திகள்