சாம்சங் நியோ கியூலெட் டி.வி

சர்வதேச பிராண்டாகத் திகழும் சாம்சங் நிறுவனம் புதிதாக 8-கே ரெசல்யூஷனைக் கொண்ட நியோ கியூலெட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-05-11 20:30 IST

50 அங்குலம் முதல் 98 அங்குலம் அளவில் இது வெளியாகியுள்ளது. குவாண்டம் மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் இதில் பின்பற்றப் பட்டுள்ளது. இது 3.3 கோடி பிக்செல்களை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டிருப்பதால் 100 கோடி வண்ணங்களை இது வெளிப்படுத்தும்.

இதில் கியூ சிம்பொனி 3.0 உள்ளது. இது திரையில் காட்சிகளைத் துல்லியமாகவும், சவுண்ட்பாரிலிருந்து இசையையும் நேர்த்தியாக ஒருசேர வெளிப்படுத்தும். இதில் முதல் முறையாக வயர்லெஸ் டால்பி அட்மோஸ் உள்ளது. இதில் ஸ்மார்ட் ஹப் என்ற சிறப்பு ஒருங்கிணைப்பு வசதி உள்ளது. இதனால் இதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்க முடியும். அடுத்ததாக வீடியோ கேம் ஆடவும் முடியும். வீடியோ ஆன் டிமாண்ட் சேவை மூலம் 100 சேனல்களை இந்தியாவில் வழங்குகிறது.

இதன் விலை சுமார் ரூ.3,14,990 முதல் ஆரம்பமாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்