ரியல்மி நார்ஸோ 60 எக்ஸ்

Update:2023-09-21 14:23 IST

ரியல்மி நிறுவனம் புதிதாக நார்ஸோ 60 எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.72 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரை, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி 6100 பிளஸ் 6 என்.எம். பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் இன்டெர்செல்லர் எக்ஸ் வடிவமைப்பு, கிரேடியன்ட் விளக்கு வெளிச்ச நுட்பமும் உள்ளது.

4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 2 டி.பி. வரை அதிகரிக்கலாம். இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 33 வாட் சூப்பர் வூக் சார்ஜரும் அளிக்கப்படுகிறது.

4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக மாடல் விலை சுமார் ரூ.12,999.

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக மாடல் விலை சுமார் ரூ.14,499.

Tags:    

மேலும் செய்திகள்