ரியல்மி நார்ஸோ என் 55

ரியல்மி நிறுவனம் நார்ஸோ என் 55 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-05-04 15:30 GMT

இதில் 6.72 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரை உள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 88 பிராசஸர் உள்ளது. இரட்டை சிம் கார்டு போடும் வசதி கொண்டது 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டது. 128 ஜி.பி. நினைவகம் உடையது.

மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 1 டி.பி. வரை இதை விரிவாக்கம் செய்யலாம். பக்கவாட்டில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. முன்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. நீடித்து செயலாற்றும் வகையில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

கருப்பு, நீலம் ஆகிய நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.10,999.

Tags:    

மேலும் செய்திகள்