ஒன் பிளஸ் 11 மார்பிள் ஒடிஸி லிமிடெட் எடிஷன்

பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக் கும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய வரவாக ஒன் பிளஸ் மாடலில் மார்பிள் ஒடிஸி ஸ்மார்ட்போனில் லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-06-08 20:19 IST

மார்பிள் போன்ற தோற்றமளிக்கும் வகை யில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றம், வடிவமைப்பு இதன் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும். 6.7 அங்குல திரையைக் கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவைக் கொண்டது.

8 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உடையது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 8-கே மற்றும் 4-கே ரெசல்யூஷனில் காட்சிகளை வீடியோ படமாக்கும் வசதி, இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.64,999.

Tags:    

மேலும் செய்திகள்