நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக ஜி 42 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரை உள்ளது. 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 128 ஜி.பி. நினைவகம் உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கார்டு போடும் வசதி உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், ஆக்டாகோர் ஸ்நாப் டிராகன் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 20 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கிரே மற்றும் லாவண்டர் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் ரூ.24,030.