நோக்கியா ஜி 310, சி 210 அறிமுகம்

Update:2023-08-30 12:09 IST

நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக ஜி 310 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 1 டி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம். பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ள இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புளூடூத் இணைப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் எடை 193 கிராம். நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 20 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.15,490.

இத்துடன் சி 210 என்ற மாடலையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 6.3 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்ட இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவக திறனை 512 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 3 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.9,080

Tags:    

மேலும் செய்திகள்