நோக்கியா சி 32
நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சி 32 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.;
குறைந்த விலையில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. 1.6 கிகாஹெர்ட்ஸ் திறன் ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. நினைவகம் உடையது. இதை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. சார்கோல், மின்ட், பிங்க் நிறங் களில் கிடைக்கும். 64 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.8,999. 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.9,499.