நோக்கியா 130, 150 செல்போன் அறிமுகம்

Update:2023-08-23 13:13 IST

நோக்கியா மொபைல் போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 130 மற்றும் நோக்கியா 150 ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 2017-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 130 மாடலில் மிகச் சக்திவாய்ந்த ஸ்பீக்கர் இருக்கும். இது பாடல்கள் கேட்பதற்கு மிகவும் சிறந்த செல்போனாக கருதப்பட்டது. இதில் எம்.பி 3 பிளேயரும் உள்ளது. மேலும் 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் இதில் உள்ளது. பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை வயர் இணைப்பின்றி கேட்டு மகிழ முடியும். இதில் 2 ஆயிரம் தொடர்பு எண்களையும், 500 எஸ்.எம்.எஸ்.களையும் சேமித்து வைக்க முடியும். 2.4 அங்குல கியூ.வி.ஜி.ஏ. திரை, 1,450 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. இது பயன்படுத்தாத சூழலில் 34 நாட்கள் வரை மின்திறனை சேமித்திருக்கும். 20 மணி நேரம் தொடர்ந்து செயல்படக்கூடியது.

நோக்கியா 130 மாடல் விலை சுமார் ரூ.1,947.

நோக்கியா 150 மாடல் விலை சுமார் ரூ.2,699.

Tags:    

மேலும் செய்திகள்