மோட்டோரோலா எட்ஜ் 40
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக எட்ஜ் 40 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.;
இது 6.55 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் ஓலெட் திரையைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.29,999. ஆக்டாகோர் டைமென்சிடி 8020 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. மெல்லிய, உறுதியான உலோக பிரேமைக் கொண்டது. 4,400 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 68 வாட் டர்போ பவர் சார்ஜருடன் வந்துள்ளது. 15 வாட் திறன் கொண்ட வயர்லெஸ் சார்ஜரும் இத்துடன் கிடைக்கும்.
இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. கருப்பு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது.