ஐடெல் சூப்பர் குரு செல்போன்

Update:2023-07-05 12:45 IST

ஐடெல் நிறுவனம் புதிதாக சூப்பர் குரு என்ற பெயரில் செல்போனை அறிமுகம் செய்துள் ளது. இதில் மூன்று மாடல்கள் (சூப்பர் குரு 200, சூப்பர் குரு 400, சூப்பர் குரு 600) விற்பனைக்கு வந்துள்ளன. இதில் முக்கிய அம்சமாக யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது. மிக உறுதியான மேல் பாகம் உடையதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

அனைத்து மாடலும் 2.4 அங்குல திரையைக் கொண்டவை. இதில் 1,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐடெல் சூப்பர் குரு 200 விலை சுமார் ரூ.1,499, ஐடெல் சூப்பர் குரு 400 விலை சுமார் ரூ.1,699 ஐடெல் சூப்பர் குரு 600 விலை சுமார் ரூ.1,899.

Tags:    

மேலும் செய்திகள்