ஐடெல் 2 இ.எஸ். ஸ்மார்ட் கடிகாரம்

ஐடெல் நிறுவனம் புதிதாக 2 இ.எஸ். என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-05-05 22:00 IST

இது 1.8 அங்குல திரையைக் கொண்டது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதில் உள்ளீடாக மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. செயற்கை தொழில்நுட்பம் உள்ளதால், குரல்வழிக் கட்டுப்பாடு மூலம்செயல்படக் கூடியது. இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, உடற்பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரி அளவு உள்ளிட்டவற்றைத் துல்லிமாகக் காட்டும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 12 நாட்கள் வரை செயல்படும். இதன் விலை சுமார் ரூ.1,699.

Tags:    

மேலும் செய்திகள்