ஐ.கியூ.ஓ.ஓ. இஸட் 7 எஸ்
ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் இஸட் 7 எஸ் என்ற பெயரிலான நவீன ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.;
இது 6.38 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஸ்நாப்டிராகன் 695 டைமென்சிடி 920 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்டதாக வந்துள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. 64 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. விரல் ரேகை உணர் சென்சார், இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 44 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.18,999.
8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.19,999.