ஐடெல் பி 40 பிளஸ் அறிமுகம்

Update:2023-07-26 13:23 IST

ஐடெல் நிறுவனம் புதிதாக பி 40 பிளஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. 6.82 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

இதன் பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார், 7 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் ஆகியவை உள்ளன. கருப்பு, சியான் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் இதன் விலை சுமார் ரூ.6,999.

Tags:    

மேலும் செய்திகள்