ஹேய்ர் சலவை இயந்திரம்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் இந்திய இல்லங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய ரக ஆட்டோமேடிக் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் முதல் முறையாக முப்பரிமான சுழற்சி கொண்ட சலவை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 கிலோ மற்றும் 9 கிலோ அளவுகளில் வந்துள்ளது. இதன் விலை முறையே சுமார் ரூ.43 ஆயிரம் மற்றும் சுமார் ரூ.46 ஆயிரம். இதில் பயோனிக் மேஜிக் பில்டர் உள்ளது.
இதில் உள்ள தொழில்நுட்பம் துணிகள் போடும் டிரம்மை சுத்தமாக வைத்திருக்கும். இது துவைக்கும் இயந்திரத்தில் தேங்கும் அழுக்குகளால் உருவாகும் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுநோய் கிருமிகள் துணிகளில் படிவதைத் தவிர்க்கும். இதில் உள்ள நானோ பந்துகள் ஒருமுறை துணிகள் துவைக்கும்போது 2.5 கோடி முறை சுழன்று துணிகளை சுத்தமாக்கும்.
இதில் உள்ள ஸ்மார்ட் சென்ஸ் தொழில்நுட்பம் துணிகளுக்கேற்ற அளவில் மட்டுமே தண்ணீரை நுகரும். அதி விரைவாக 15 நிமிடங்களில் துணியைத் துவைத்துத் தரும். தண்ணீரின் அளவு குறைந்தாலும் இது துவைப்பது தடைபடாது. அதற்கேற்ப குறைவான தண்ணீர் அழுத்தத்திலும் இது செயல்படும். மின் தடை உள்ள பகுதியிலும் இது செயல்படும் வகையில் ஆட்டோ ரீஸ்டார்ட் வசதி கொண்டது. மின்சாரம் தடைப்பட்டு பிறகு வந்தாலும், முந்தைய நிலையிலிருந்து இதன் செயல்பாடு தொடங்கும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது.