ஹேயெர் கூகுள் டி.வி
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேயெர் நிறுவனம் புதிதாக கூகுள் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.;
இதில் கியூலெட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 65 அங்குலம் மற்றும் 55 அங்குல அளவுகளில் வந்துள்ளது. மிகவும் மெல்லிதான வடிவமைப்பைக் கொண்டது.
கூகுள் அசிஸ்டென்ட் மூலம் இதை செயல்படுத்தலாம். உள்ளீடாக குரோம்காஸ்ட் உள்ளது. நெட்பிளிக்ஸ், ஜீ 5, பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களையும் இதில் பார்த்து மகிழலாம். இனிய இசையை வழங்க 30 வாட் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. குவாட்கோர் பிராசஸர், வை-பை இணைப்பு, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.69,999.