கேலக்ஸி எப் 54

சாம்சங் நிறுவனத் தயாரிப்புகளில் கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.;

Update: 2023-06-15 13:48 GMT

இதில் தற்போது எப் 54 என்ற மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 6.7 அங்குல சூப்பர் அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் எக்ஸினோஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உடையது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும். செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்ட இது 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 25 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

நீலம், சில்வர் வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடல் ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.29,999.

Tags:    

மேலும் செய்திகள்