பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-06-22 15:48 IST

இதில் எல்.இ.டி. மற்றும் கியூலெட் திரைகள் உள்ளன. 32 அங்குலம் முதல் 75 அங்குலம் அளவுகள் வரை இவை கிடைக்கும். 32 அங்குலம் முதல் 40 அங்குலம் வரையிலான மாடலில் 48 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது. இவை ஆண்ட்ராய்டு டி.வி.யாகும். இதில் உள்ளீடாக நெட்பிளிக்ஸ் உள்ளது. 1 ஜி.பி. முதல் 8 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இது வந்துள்ளது. 50 அங்குலம் முதல் 65 அங்குலம் வரையிலான டி.வி. மாடல்கள் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண் டவையாக உள்ளன. 75 அங்குல மாடல் கியூலெட் திரையைக் கொண்டுள்ளன.

இதில் 60 வாட் டால்பி ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது. இவற்றின் விலை சுமார் ரூ.10,888 முதல் சுமார் ரூ.99,999 வரையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்