ஆடியோ டெக்னிகா ஹெட்போன்
ஆடியோ டெக்னிகா நிறுவனம் புதிதாக இரண்டு மாடல் (ஏ.டி.ஹெச். எம் 20.எக்ஸ்.பி.டி., ஏ.டி.ஹெச். எஸ் 220.பி.டி.) ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.;
தொழில் முறையில் ஹெட்போனை அதிக நேரம் பயன் படுத்துவோருக்கு உரிய வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 3 மணி நேரம் செயல்படும் அளவுக்கு பேட்டரி திறன் கொண்டது. இதில் உள்ளீடாக மைக்ரோ போன் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. கருப்பு நிறத்தில் 216 கிராம் எடை கொண்ட தாக வந்துள்ளது.
எக்ஸ்.பி.டி. மாடல் விலை சுமார் ரூ.13,500. பி.டி. மாடல் விலை சுமார் ரூ.7,720.