அம்பரேன் பவர் பேங்க்

அம்பரேன் நிறுவனம் புதிதாக இரண்டு உயர் செயல்திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. பவர் அல்ட்ரா மற்றும் பவர்லிட் பூஸ்ட் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.;

Update:2023-05-11 20:15 IST

பவர் அல்ட்ரா மாடல் 25 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டது. பவர்லிட் பூஸ்ட் மாடல் 14,400 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டது. இவை இரண்டுமே பல அடுக்கு பாதுகாப்பு லேயர்களைக் கொண்டுள்ளது. இதனால் இதன்மூலம் பாதுகாப்பாக சார்ஜ் செய்ய முடியும்.

ஒரே சமயத்தில் மூன்று மின் சாதனங்களை இதில் இணைக்க முடியும். அல்ட்ரா மாடலில் 11 எல்.இ.டி. இன்டிகேட்டர்கள் உள்ளன. விரைவாக சார்ஜ் ஆக இதில் 3.0 குயிக்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லேப்டாப்பை யும் இதில் சார்ஜ் செய்ய முடியும்.

கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும். அல்ட்ரா மாடலின் விலை சுமார் ரூ.4,999. பவர் லிட் மாடலின் விலை சுமார் ரூ.3,999.

Tags:    

மேலும் செய்திகள்