தொண்டை வலி, தொண்டை கரகரப்பா..? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்

சின்ன வெங்காயத்தை நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிடலாம்.

Update: 2024-09-14 00:30 GMT

குளிர்காலங்கள் மற்றும் சீதோஷ்ண மாற்றங்களால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம். அவ்வகையில், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை குரல் பாதிப்பு போன்றவற்றுக்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

1) ஆடாதோடை இலை-2, மிளகு -5: இதை பனை வெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது தேனுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.

2) சின்ன வெங்காயம் -5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும்.

3) பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.

4) முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

5) சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

6) பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும்.

7) வெந்நீரில் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும்.

8) சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் -1- 2 மாத்திரை கடித்து சாப்பிட வேண்டும்.

9) தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

 

Tags:    

மேலும் செய்திகள்