அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது.

Update: 2024-07-27 02:39 GMT

சென்னை,

தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2024 -25 ம் கல்வியாண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.58/, பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டுமே. SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை. பதிவுக் கட்டணம் – ரூ.2/- மட்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை விண்ணப்பத்தாரர்கள் Debit Card, Credit Card/ NetBanking/ UPI மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai-15″ என்ற பெயரில் 27/07/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்