வருமான வரித்துறையில் வேலை: 10 -ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வருமான வரித்துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-09-17 12:26 GMT

சென்னை,

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறையில் தமிழ்நாடு மற்றும் புதுவை பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:

பணி வழங்கும் நிறுவனம்: வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)

காலி இடங்கள்: 25

பதவி: கேண்டீன் உதவியாளர்

பணி இடம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 22-9-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2024

மேலும் விவரங்களை வருமானவரித்துறையில் தெரிந்து கொள்ளலாம். 

இணையதள முகவரி: https://www.tnincometax.gov.in/

Tags:    

மேலும் செய்திகள்