தபால் துறையில் 44,228 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 44,228 - பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தபால் துறையில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்களும், தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உத்தேச பட்டியல் வெளியிடப்படும். வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்.சி. பிரிவினருக்கு 5 வருடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவுக்கு ஏற்று 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
இந்திய அஞ்சல் துறை கிராமின் டாக் சேவக் (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இந்திய அஞ்சல் துறை கிராமின் டாக் சேவக் (GDS), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024. தேர்வு அறிவிப்பினை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx