திருப்பதி கருட சேவை: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று திருப்பதி செல்கிறது

கருட சேவையில் திருப்பதி ஏழுமலையான் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்வார்.

Update: 2024-10-06 04:46 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கருட சேவை அன்று திருப்பதி ஏழுமலையான் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வீதி உலா வருவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மதியம் 2 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு ஆண்டாள் சூடிக்கொடுத்தமாலை, கிளி வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்பு கார் மூலம் திருப்பதி செல்கிறது. அங்கு நடைபெறும் கருட சேவை நிகழ்ச்சியில் திருப்பதி ஏழுமலையான் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்வார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா, அறங்காவலர்கள், அதிகாரி சக்கரை அம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்