பிதுர் தோஷ நிவர்த்திக்கு பஞ்ச பைரவர் வழிபாடு

ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.;

Update:2024-11-15 15:52 IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற வானுலக பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலமாகும். எனவேதான் இத்தலம் 'ஆவூர்' என்றானது. ('ஆ' என்பது 'பசு'வை குறிக்கும்).

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 'பஞ்ச பைரவ மூர்த்திகள்.' இந்த ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும்.

பஞ்ச பைரவ வழிபாடு என்பது, 'பிதுர்தோஷ நிவர்த்தி'க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்