'சிங்கம் அகெய்ன்' படம் ஓ.டி.டியில் வெளியாவது எப்போது?
கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ’சிங்கம் அகெய்ன்’ ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது;
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, சமீபத்தில் 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கினார். அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்க கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இதனையடுத்து ரசிகர்கள் இதன் ஓ.டி.டி ரிலீஸை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், எதிர்பார்த்தபடி, இதன் ஓ.டி.டி குறித்த தகவல்வெளியாகி உள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 27-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.