ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாராவின் 'மாய நிழல்'
நயன்தாரா நடித்துள்ள 'மாய நிழல்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.;
சென்னை,
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் 'நிழல்' என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 'மாய நிழல்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்தினை பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்திருக்கிறார். குழந்தையை மையமாக கொண்டு வெளியான இந்த திரில்லர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்தில் இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 'மாய நிழல்' திரைப்படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 30-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.