இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் - 06.09.24

இன்று ஓ.டி.டியில் சில படங்கள் வெளியாகியுள்ளன.

Update: 2024-09-06 03:56 GMT

சென்னை,

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

கில்

பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர். இவர் தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் ஆக்சன் படமான 'கில்' படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

கால் மீ பே

அனன்யா பாண்டே தனது முதல் வெப் தொடரில் நடித்துள்ளார். இதற்கு கால் மீ பே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த தொடரின் முதல் எபிசோட் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இது வரை படங்களில் மட்டுமே நடித்து வந்த அனன்யா பாண்டே தற்போது வெப் தொடரில் நடித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடையவைத்துள்ளது.

அடியோஸ் அமிகோ

நகஸ் நாசர் இயக்கத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியான மலையாள படம் அடியோஸ் அமிகோ. இப்படத்தில் ஆசிப் அலி, அனகா, சவுபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்